தமிழகத்தை பசுமையாக்க மரக்கன்றுகளை நடுவோம் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
‘சைதாப்பேட்டை தொகு தியை பசுமையாக்குவோம்’ என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழா, சைதாப்பேட்டை ரங்கபாஷ்யம் தெருவில் நேற்று நடந்தது. மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்து ஸ்டாலின் பேசியதாவது:
சைதாப்பேட்டை தொகுதி யில் ஒரு லட்சம் மரக்கன்று களை ஓராண்டுக்குள் நடவேண் டும் என்ற நல்ல எண்ணத் துடன் இந்த விழா ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட் டாலும் மக்களின் பிரச்சினைக ளைப் பற்றி சிந்தித்து செயல் பட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுகதான் ஆட்சியில் இருக்கிறது என மக்கள் எண்ணும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இன் றைக்கு திமுகவுக்கு 89 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம், 89 தொகுதிகளிலும் நீர்நிலை களை தூர்வார வேண்டும் என்று வேண்டுகோள் விடுத் தேன். அதையேற்று கட்சித் தொண்டர்கள், திமுக எம்எல்ஏக்கள் இல்லாத தொகுதி களிலும்கூட அந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் வர் கே.பழனிசாமி தொகுதியி லும் தூர்வாரும் பணியை நமது கட்சியினர் நிறைவேற்றி உள்ளனர்.
நமது நோக்கம் ஆட்சி, பதவிகள் அல்ல. என்றைக்கும் பணி செய்து கிடக்கும் நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த நாளின்போது, அதன் அடையாளமாக மரக்கன்று நடுவது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
தூர் வாரும் பணியை 89 தொகுதிகளிலும் மேற் கொள்ள வேண்டும் என முதலில் திட்டமிட்டு இருந்தா லும், தமிழகம் முழுவதும் பரவலாக அந்தப் பணி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. அதுபோலவே, தமிழகத்தை பசுமையாக்க மரக்கன்றுகள் நடுவோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
சைதை தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘சைதை தொகுதியில் மொத்தம் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொருவரின் பிறந்த நாளில் அவரது பெயரில் மரக்கன்று நடப்படும். அதனைத் தொடர்ந்து கண் காணித்து சிறப்பாக வளர்த் தெடுப்பவர்களுக்கு ஆண்டு தோறும் பசுமை விருது வழங்க உள்ளோம். அடுத்த ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்’’ என் றார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் சேகர்பாபு, வாகை சந்திரசேகர், நடிகர் மயில்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.