தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கு 2017-18ம் ஆண்டுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கப்பட் டிருப்பதாக நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி அறிவித் துள்ளது.
கமிட்டி நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் சுயநிதி தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு கடந்த 2012-13ல் கல்விக் கட்டணம் நிர்ணயிக் கப்பட்டது. கட்டணத்தை திருத்தி யமைப்பது தொடர்பாக தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு 2017-18ம் கல்வியாண்டுக்கு இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு (பி.இ., பி.டெக்.) கீழ்க்கண்டவாறு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓராண்டுக்கான கட்டண விவரம்:
அரசு ஒதுக்கீடு
பி.இ., பி.டெக். (‘என்பிஏ’ அங்கீகாரம்) - ரூ.55,000
பி.இ., பி.டெக். (சாதாரணம்) - ரூ.50,000
நிர்வாக ஒதுக்கீடு
பி.இ., பி.டெக். (‘என்பிஏ’ அங்கீகாரம்) - ரூ.87,000
பி.இ., பி.டெக். (சாதாரணம்) - ரூ.85,000
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.17 ஆயிரம் வரை அதிகரிப்பு
கடைசியாக 2012-13ல் கல்விக் கட்டணம் திருத்தியமைக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கல்விக் கட்டணம் நடப்பு கல்வியாண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். கல்விக் கட்டணத்தில் டியூ ஷன் கட்டணம், மாணவர் சேர்க்கை கட்டணம், சிறப்புக் கட்டணம், ஆய்வகம், கணினி, இன்டர்நெட், நூலகம், விளையாட்டு, பராமரிப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களும் அடங்கும்.
பழைய கட்டணத்தைவிட, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.10 ஆயி ரமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங் களுக்கு அதிகபட்சம் ரூ.17 ஆயிரமும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பழைய கட்டணத்தைவிட, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சம் ரூ.17 ஆயிரமும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.