தமிழகம்

நவ.9-ல் ஜெயமோகனின் நூல்கள் வெளியீட்டு விழா

செய்திப்பிரிவு

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ தொடரின் நூல்கள் வெளியீட்டு விழா வரும் 9-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிவரும் ‘வெண்முரசு’ மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் தியேட்டர் அரங்கில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவில் எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்ணன், பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், பேராசிரியர் னிவாசன், ஓவியர் ஷண்முக வேல், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT