நிலத்தின் ஈரத்தன்மையை அறிந்து மின்மோட்டாரை இயக்க உதவும் தானியங்கி கருவியை திருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பருவமழை பொய்த்த நிலை யில், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. விவசாயம் செய்யப் போதிய தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் செலவைக் குறைக்கும் வகையிலும், வய லுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாயி களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நவீன கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள் மு.ர.முகமது உசேன், ர.நந்தகுமார், மு.பழனிசாமி ஆகியோர் துறைத் தலைவர் முனைவர் எஸ்.சுமித்ரா, பேராசிரியர் முனைவர் கா.வினோத் குமார் ஆகியோரின் வழிகாட்டு தலுடன் நிலத்தின் ஈரத் தன்மைக்கேற்ப மின்மோட்டாரை தானாக இயக்கும், நிறுத்தும் தானியங்கி கருவியையும், செல் போன் செயலியையும் கண்டு பிடித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மாணவர்கள் கூறியதாவது: எந்த ஒரு இடத்தில் இருந்தும் குறுஞ்செய்தி மூலமாக மோட்டார்களை இயக்கும், நிறுத்தும் தொழில்நுட்பம் பயன் பாட்டில் உள்ளது. இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, வயலுக்கு போதுமான தண்ணீர் பாய்ந்துவிட்டதா, இல்லையா என்பது தெரியாது. இதனால், தண்ணீர் வீணாகும் நிலையும் ஏற்படும்.
இந்தக் குறையைப் போக்கும் வகையில், நிலத்தின் ஈரத்தன் மைக்கு ஏற்ப மோட்டாரை இயக்கும், நிறுத்தும் கருவியை யும், செயலியையும் வடிவமைத் துள்ளோம். இந்தக் கருவியில், கன்ட்ரோலர், ஈரப்பதத்தை அளவி டுவதற்கான சென்சார், தானியங்கி வால்வுகள், ரிலே சர்க்யூட், வைஃபை மோடம் ஆகியவை உள்ளன.
இயங்குவது எப்படி?
நிலத்தின் ஈரத்தன்மையை அறிந்துகொள்வதற்காக வயலில் சென்சார் கருவியும், தண்ணீர் குழாயில் தானியங்கி வால்வும் பொருத்தப்படும். நிலத்தின் ஈரத்தன்மை குறிப்பிட்ட அளவை விட குறையும்போது, தானாகவே மின்மோட்டார் இயங்கத் தொடங் கும். போதிய ஈரப்பதம் அடைந்த வுடன் மோட்டார் தானாகவே நின்றுவிடும்.
தேவைப்பட்டால், இந்தக் கருவி மூலம் விவசாயியின் செல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் படும். அப்போது, அந்த செல்போன் செயலி மூலமாக, விவசாயி இருக்கும் இடத்தில் இருந்தே மின் மோட்டாரை இயக்கலாம். அதேபோல, நிலத்துக்கு தேவை யான ஈரத்தன்மை கிடைத்தவுடன், விவசாயியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும். அப்போது, அதே செயலி மூலமாக மின் மோட்டாரை நிறுத்த முடியும்.
இதன்மூலம், விவசாயி ஒருவர் உலகின் எந்த இடத்தில் இருந்தும் தனது வயலுக்கு தண் ணீரைப் பாய்ச்ச முடியும். நேரடி யாக வயலுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற கட்டா யம் இல்லை. இந்த முறையால், தண்ணீர் வீணாவது தடுக்கப்படுவ துடன் மின்சாரம் சேமிக்கப்படும்.
தேவைக்கேற்ப பாசனம்
பயிரிடப்படும் பயிரின் தன் மைக்கேற்ப, எவ்வளவு ஈரப்பதம் தேவை என்பதையும் இந்தக் கருவியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். சாகுபடியின் ஒவ்வொரு சமயத்திலும் தண்ணீ ரின் தேவை மாறுபட்ட அளவில் இருக்கும். இதற்கு ஏற்ப, செல் போன் செயலி மூலம் தண்ணீர் தேவை அளவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இந்த செயலி மூலம், நிலத்தின் ஈரத்தன்மை அளவை எந்த நேரத்திலும் கண் காணிக்க முடியும்.
இந்தக் கருவியை உருவாக்க சுமார் ரூ.10 ஆயிரம் செலவா கிறது. இதன் பயன்பாடு அதிக ரிக்கும்போது, இந்தச் செலவு குறை யும். இத்திட்டத்துக்கு எங்களுக்கு உறுதுணை அளித்த கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சத்திய மூர்த்தி, ஆலோசகர்கள் முனைவர் சண்முகநாதன், முனைவர் சிவசங்கரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.