ஆடி மாதப் பவுர்ணமியான இன்று துறவிகள் தங்களது சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்குகின்றனர்.
ஆடி மாதப் பவுர்ணமியை ‘வியாச பூர்ணிமா’ என்று அழைப் பது வழக்கம். அத்வைத, விசிஷ் டாத்வைத, துவைத சம்பிரதாயத் தைச் சேர்ந்த துறவிகள் அன்று முதல் சாதுர்மாஸ்ய (நான்கு மாதங்கள்) சங்கல்பம் என்று விரதம் இருப்பார்கள். சமண மதப் பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளும் இந்த விரதத்தை மேற்கொள்வர்.
ஆடி முதல் ஐப்பசி வரை யிலான மழைக்காலத்தில், ஓரிடத் தில் இருந்து இன்னொரு இடத் துக்குச் சென்றால், மண்ணின் அடியில் இருந்து வெளிவரும் உயி ரினங்கள் துன்பமடையக்கூடும். இதை தவிர்ப்பதற்காக துறவிகள் ஒரே இடத்தில் தங்கி விரதம் இருக்கின்றனர். பொதுவாக, துறவிகள் ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கக் கூடாது என்று சாஸ்திர விதி உள்ளது. ஆடிப் பவுர்ணமி முதல் ஐப்பசி வரை அதற்கு விலக்கு உண்டு. இந்தக் காலத்தில், தங்கள் நியமங்களுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்குகின்றனர்.
பின்னர் ஏற்பட்ட சில நடைமுறை அசவுகரியங்களால், தற்போதைய காலக்கட்டத்தில் இந்த விரதம் 4 பட்ச காலம் அனுசரிக்கப்படுகிறது. (அமாவாசை முதல் பவுர்ணமி வரை உள்ள 15 நாட்கள் ஒரு பட்சம்) இந்த விரத காலத்தில் துறவிகளை உபசரிப்பதும், வணங்குவதும், அவர்களது தினப்படி பூஜைக்கு வேண் டிய பொருட்களை வழங்கு வதும் மிகுந்த புண்ணிய பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை.
மகாபாரதம், புராணங்களை அளித்தவர் வியாச மகரிஷி. வேதங்களை வகைப்படுத்தியவர். அவரை ஆடி மாதப் பவுர்ணமி யன்று துறவிகள் பூஜிப்பர். எனவே இந்த நாள் ‘குரு பூர்ணிமா’ என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் குரு பூர்ணிமா 9-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய சங்கல்பத்தை தொடங்குகின்றனர்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஸ்ரீபெரும்புதூரிலும், ஸ்ரீஅஹோபில மடம் ஸ்ரீமத் அழகியசிங்கர் சுவாமிகள் அஹோ பிலத்திலும், வானமாமலை ஜீயர் சுவாமிகள் மன்னார்குடியிலும், ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் திருவரங் கத்திலும் தங்களது சாதுர்மாஸ்ய சங்கல்பத்தை தொடங்குகின்றனர் என சென்னை ஆண்டவன் ஆசிரம செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.