மீன்வள படிப்பு கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக தமிழ் நாடு மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் எஸ்.ஏ.சண்முகம் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்தின் பி.எப்.எஸ்சி. படிப்புக்கு ஜூலை 21-ம் தேதியும் பி.இ. (மீன்வள பொறியியல்) படிப்புக்கு 22-ம் தேதியும் கலந்தாய்வு நடை பெறுவதாக இருந்தது.
மறுதேதி பின்னர் அறிவிப்பு
இந்த இரு கலந்தாய்வுகளும் தள்ளிவைக்கப் படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாடு மீன்வள பல் கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் எஸ்.ஏ.சண்முகம் தெரி வித்துள்ளார்.