தமிழகம்

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெ.ஜேம்ஸ்குமார்

புற்றுநோயை குணப்படுத்த தேசிய சித்த மருத்துவ நிறுவனத் துடன் இணைந்து அடையாறு புற்று நோய் மருத்துவமனை புரிந் துணர்வு ஒப்பந்தம் போடவுள்ளது.

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் ஒவ் வொரு புதன் கிழமையும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்காக சிறப்பு புற நோயாளிகள் பிரிவு இயங்குகிறது. இதில் 50 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலை யில் அலோபதி மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ முறை யில் சிகிச்சை அளிக்க இம்மருத் துவமனையுடன் அடையாறு புற்று நோய் மருத்துவமனை விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது.

இது குறித்து தேசிய சித்த மருத்துவமனை நிறுவன இயக்குநர் மருத்துவர் பானுமதி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அடையாறு புற்று நோய் மருத்துவமனை எங்களுடன் இணைந்து கூட்டு சிகிச்சைக்காக ஆராய்ச்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத் தாக உள்ளது. மேலும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் ரூ. 9.50 கோடியில் 10 படுக்கை வசதிகளுடன் கூடிய புற்று நோய்க்கான சிறப்பு மருத் துவமனை அமைக்கப்படவுள் ளது. இதற்காக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT