8 மணி நேர வேலை, சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக போலீஸாரின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்துக்கு வரவுள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் போலீஸார் உள்ளனர். காவலர் சங்கம், 8 மணி நேர வேலை, சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை போலீஸார் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், ‘தமிழ்நாடு காவல் துறையின் பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த 22-ம் தேதி ஒட்டப்பட்டிருந்தது. இது போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து போலீஸாரின் குறைகளைத் தெரிவிக்க தனியாக ஓர் இணையதள முகவரியை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தொடங்கினார்.
இன்று, சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறும் வகையில் போலீஸாரின் குடும்பத்தினர் முதல் வர் கே.பழனிசாமியைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர். போலீ ஸாரின் குடும்பத்தினர் மெரினா வில் இருந்து கோட்டைக்கு, பேரணியாகச் சென்று மனு கொடுப் பார்கள். இதில் போலீஸாரும் கலந்து கொள்வார்கள் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங் களில் தகவல்கள் பரவி வருகின்றன.
போலீஸார் குடும்பத்தினர் மனு கொடுப்பதை தடுக்க அதிகாரிகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். மெரினா மற்றும் தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போலீஸாருக் கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை கொடுக்கக்கூடாது என்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.