குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்க கூடாது என வலியுறுத்தி அதிமுக அலுவல கத்தை முற்றுகையிட வந்த பெரி யார் திராவிடர் கழகத்தினரை போலீஸார் கைது செய்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது. இத்தேர் தலில் பாஜக கேட்டுக் கொண்ட தற்கிணங்க, அக்கட்சியின் வேட் பாளருக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை கண்டு கொள்ளாத பாஜகவின் நிலைப் பாட்டை கண்டித்து, அதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க கூடாது என்று வலி யுறுத்தும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தை முற்று கையிடப்போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது.
இதையடுத்து, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலு வலகத்துக்கு மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் தலை மையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு, பெரியார் திராவிடர் கழகத்தினர் துணைத்தலைவர் துரைசாமி தலைமையில் அந்த அமைப்பினர் வந்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை அழுப்பியவாறு வந்த அவர்களை, அதிமுக அலுவலகத்துக்கு முன்னதாகவே நிறுத்தி 3 பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்கள், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதை யடுத்து, அதிமுக தலைமை அலு வலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.