தமிழகம்

11 இடங்களில் வெயில் சதம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கோடைகாலம் முடி வடைந்த நிலையிலும் பல இடங் களில் வெயில் குறையவில்லை. வெப்பச்சலனத்தின் காரணமாக அவ்வப்போது மழை பெய்தாலும், பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நேற்றும் தமிழகம் முழுவதும் 11 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

அதிகபட்சமாக மதுரை, திருச்சி யில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. நாகப்பட்டினத்தில் 103 டிகிரி, கடலூர், கரூரில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதேபோல, காரைக்காலில் 101 டிகிரி, புதுச்சேரியில் 101 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி, சென்னையில் 100 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெயில் பதிவானது.

வானிலை முன்னறிவிப்பு: சென்னையைப் பொறுத்தவரை யில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக் கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT