எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் டி.பி.கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர்களின் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கும் பொறியியல் படிப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் பேசும்போது, “அடுத்த 50 ஆண்டு எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பொறியியல் படிப்புகளில் உலகத்தரமான கல்வியை வழங்குவதன் மூலம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் முக்கிய இடத்தை வகிக்கிறது. நவீன உள்கட்டமைப்பு, அனைவருக்கும் ஏற்ற பாடத்திட்டம், ஸ்டூடன்ட் அப்ராட் திட்டம் போன்றவற்றை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது என்றார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபீர் கே.பக்சி பேசும்போது, “மாணவர்கள் கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். நாள்தோறும் நடந்தவற்றை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்றார். பல்கலைக்கழக பதிவாளர் என்.சேதுராமன் மாணவர்களுக்கு இயக்குநர்கள், டீன்கள், பல்வேறு துறைத் தலைவர்களை அறிமுகம் செய்துவைத்தார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை பல பெற்றோர்கள் எடுத்துரைத்தனர். எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பொறுப்பு இயக்குநர் டி.கிங்ஸ்லி ஜெபசிங் நன்றி கூறினார்.