தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக சு.ஸ்ரீனிவாசன் (வயது 52) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிக்கையை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டுள்ளது.

பி.எஸ்சி., பி.எல் பட்டம் பெற்றுள்ள ஸ்ரீனிவாசன், 1993-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றியிருக்கும் இவர், 1997-ம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞராகவும், தெற்கு ரயில்வே வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர், தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT