தமிழகம்

எம்.எட். கல்வியியல் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் எம்.எட். படிப்பை புதி தாகத் தொடங்குகிறது. இதில் 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஜூலை 17-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 18-ம் தேதி முடிவடைகிறது.

படிப்புக் கட்டணம் முதல் ஆண்டு ரூ.5,945. இரண்டாம் ஆண்டு ரூ.4,640. கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnteu.in) தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திரநாத் தாகூர் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT