சென்னை, கண்ணம்மா பேட்டை, கார்ப்பரேஷன் காலனி முதல் தெருவில் வசிப்பவர் நடராஜன். இவரது மனைவி கலைமணி(46). கடந்த 17-ம் தேதி மேற்கு மாம்பலம் மகாலட்சுமி தெருவில் கலை மணி நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண், கலைமணி கையில் வைத்திருந்த பையை பறித்துச் சென்று விட்டார். பையில் ஆயிரத்து நூறு ரூபாயை கலைமணி வைத்திருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாம்பலம் சீனிவாச நகர் 4-வது தெருவில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் மனைவி சாந்தி(46) என்ற ‘தில்’ சாந்திதான் வழிப்பறியில் ஈடுபட்டது என்பது தெரிந்தது.
அவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். சாந்தி மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்கு கள் உள்ளன. அவரிடமிருந்து 50 கிராம் தங்க நகைகள், 1 வைர வளையல், 1 வைர நெக்லஸ், செல்போன் மற்றும் அவர் வழிப்பறி செய்யப் பயன் படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன. புழல் சிறையில் சாந்தி அடைக்கப்பட்டார்.