தமிழகம்

நேரு பூங்கா - எழும்பூர் - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் நிலையங்கள் பணி நிறைவு: செப்டம்பர் மாத இறுதியில் சோதனை ஓட்டம்

செய்திப்பிரிவு

நேரு பூங்கா எழும்பூர் சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. செப்டம்பர் இறுதியில சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தற்போது, விமான நிலையம் - சின்னமலை கோயம்பேடு - நேரு பூங்கா வரையில் மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, நேரு பூங்காவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரையில் இயக்குவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல் எழும்பூர் நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் நிலையங்கள் அமைக் கும் பணிகளை நிறைவு செய்துள் ளோம். ரயில் பாதைகள் மற்றும் சிக்னல்கள் அமைக்கும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. வரும் செப்டம்பர் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மெட்ரோ ரயில் சோதனை தொடங்கவுள்ளோம். எனவே, இந்த ஆண்டு இறுதியில் சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம் இருக்கும்போது மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கி றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT