ஓ.பன்னீர்செல்வம் தலைமை யிலான அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் நேற்று வெளி யிட்ட அறிக்கை:
18 முதல் 21 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர் மாற்றம், திருத்தம் செய்ய வும், இந்த மாதம் முழுவதும் சிறப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 9, 23-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
எந்த நேரத்தில் தேர்தல் வந்தா லும் கழக நிர்வாகிகளும், தொண் டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில் தலைமைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன் னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், பிற அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், ஜெயலலி தாவின் விசுவாசமிக்க தொண் டர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.