தமிழகம்

கதிராமங்கலத்தில் நாளை நுழைவு போராட்டம்: வைகோ தகவல்

செய்திப்பிரிவு

கதிராமங்கலம் நோக்கி வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள் ளது. இதில் அரசியல் சுயலாபம் ஏதும் கிடையாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கதிராமங்கலத்தில் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீது பிணையில் வெளியே வர முடி யாத அளவுக்கு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அறவழியில் போராடிய ஜெயராமன் உள் ளிட்டோரை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும், ஜூலை 10-ம் தேதி கும்ப கோணத்தில் இருந்து பழ.நெடு மாறன் தலைமையில் கதிரா மங்கலம் நோக்கிச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினரைக் காப்பாற்ற இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் எல்லை மீறி செயல்படும் போக்கு கண்டனத்துக்குரியது.

மறைந்த முதல்வர் ஜெய லலிதா இருந்த காலத்தில் பேரறி வாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்கிறோம் என்றும், இதுகுறித்து மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அறிவித்தார்.

அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதால் 7 பேரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT