தமிழகம்

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு

செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 15 உறுப்பு கல்லூரிகளில் மாணவர் களை சேர்க்கத் தடை கோரிய மனு தொடர்பாக ஏஐசிடிஇ பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த எஸ்.உமர் பாரூக் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அண்ணா பல்கலைக்கழகத் தின் பொறியியல் கல்லூரிகள் ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், காஞ்சிபுரம், பண்ருட்டி, அரிய லூர், திருக்குவளை, பட்டுக் கோட்டை, ராமநாதபுரம், திண்டுக் கல், நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி ஆகிய 16 இடங்களில் உள்ளன. இதில் திருச்சியை தவிர மற்ற 15 கல்லூரிகளும் பல ஆண்டுகளாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன.

இந்த 15 கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்க்கத் தடை விதிக்க வேண்டும். இக்கல்லூரி களில் தற்போது படிக்கும் மாண வர்களை ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற அரசு பொறியியல் கல்லூரி களுக்கு மாற்ற உத்தரவிட வேண் டும் என மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு ஏஐசிடிஇ தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT