குடியரசுத் தலைவர் தேர்தலுக் கான வாக்குப்பதிவை தமிழக சட்டப்பேரவை செயலக வளாகத் தில் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தியாவின் 15-வது குடிய ரசுத் தலைவரை தேர்வு செய்வ தற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வாக் குப்பதிவு தமிழக சட்டப்பேரவைச் செயலக வளாகத்தில் உள்ள குழு கூட்ட அறையில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடக்கும். இத்தேர்தலை நடத்த சட்டப்பேரவை செயலர் க.பூபதி, இணைச் செயலர் பா.சுப்பிரமணியம் ஆகியோரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும், சட்டப்பேரவைச் செயல கத்தில் இந்த தேர்தலை நடத்த ஆணையம் ஒப்புதல் அளித்துள் ளது.
தமிழக சட்டப்பேரவை உறுப் பினர்கள், நாடாளுமன்றத்திலோ அல்லது வேறு மாநில தலைமையிடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியிலோ வாக்களிக்க லாம். அவ்வாறு விரும்பினால், அவர்கள் உரிய படிவத்தில் முறை யாக தேர்தல் ஆணையத்திடம் வரும் 6-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பம் சட்டப்பேரவை செயலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
டெல்லி அல்லது வேறு மாநில வாக்குச்சாவடியில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு, அதை மாற்ற இயலாது. வாக்காளர்கள் வாக்களிக்கும் போது தங்கள் அடையாள அட்டையை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் காட்ட வேண்டும் அல்லது உதவி தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொள்ளும் வகை யில், தான் வாக்காளர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.