தமிழகம்

சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரம்: வேந்தர் மூவிஸ் மதனின் ரூ.6.35 கோடி சொத்து முடக்கம்

செய்திப்பிரிவு

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனின் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி யில் இளநிலை, முதுநிலை மருத் துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக கூறி 133 பேரிடம் ரூ.91 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையில் ‘நான் காசிக்குச் சென்று கங்கையில் ஜீவ சமாதியாகப் போகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மதன் தலைமறைவானார். இதனால், அவரிடம் மருத்துவ சீட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தலைமறைவான மதனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மதனை தமிழகம் மட்டும் அல்லாமல் வாரணாசி, ரிஷிகேஷ் என வட மாநிலங்களிலும் தேடினர். இறுதியில் திருப்பூர் பூண்டி பாலம் பகுதியில் உள்ள பெண் தோழி வீட்டில் பதுங்கி இருந்தபோது அவரை போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த மதன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில், மதனின் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பிலான அசையா சொத்து களை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் வடபழனி, சாலிகிராமம் மற்றும் கேரளா மாநிலம் இரவிபுரம் ஆகிய இடங்களில் மதனுக்கு சொந்தமான நிலங்கள் முடக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT