தமிழகம்

20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக அடிப் படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் மாவட்ட மாநாடு செங்கல்பட்டில் மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமையில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. செங்கல் பட்டு வட்டத் தலைவர் வேத கிரி வரவேற்றார். மாநாட்டை தொடங்கிவைத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ராகவன் பேசினார். மாவட்ட செயலாளர் ய.சீதாராமன் வேலை அறிக் கையையும், மாவட்ட பொருளாளர் ஆர்.சுப்பிரமணியம் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப் பித்தனர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.லெனின் வாழ்த்திப் பேசினார்.

தீர்மானங்கள்

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய முறை தொடர அரசு ஆணை வெளியிட வேண்டும், தமிழ்நாடு ஓய்வூதியர்களுக்கு எட்டாவது ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக முழு பணப் பயனுடன் 1.1.2016 முதல் அமல்படுத்த வேண் டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.23 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம் வழங்க வேண்டும், செங்கல்பட்டு ரயில் நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முன்மொழிவை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும், மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT