தமிழகம்

துண்டித்த இணைப்பை பெற பிஎஸ்என்எல் வாடிக்கையாளருக்கு அதே எண்ணுடன் மீண்டும் வாய்ப்பு

செய்திப்பிரிவு

தரைவழி தொலைபேசி இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு களைத் துண்டித்த வாடிக்கையாளர்கள் மீண்டும் அதே எண்களைப் பெற்று மறு இணைப்பு பெறு வதற்கான புதிய வாய்ப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித் துள்ளது.

ஏற்கெனவே தரைவழி தொலை பேசி (லேண்ட்லைன்), பிராட் பேண்ட் இணைப்புகளைப் பயன் படுத்தி பணம் கட்டாதது உள்ளிட்ட காரணங்களால் இணைப்பைத் துண்டித்த வாடிக்கையாளர்கள் மீண்டும் மறு இணைப்பு பெறு வதற்கான சிறப்பு மேளாவை கடந்த 6 மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவனம் நடத்தி வருகிறது.

இதன்மூலம், சுமார் 60 ஆயிரம் வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசி இணைப்புக்கான நிலுவைக் கட்டணத்தைச் செலுத்தி மீண்டும் தங்களது இணைப்பை புதுப்பித்துள்ளனர். இதன்மூலம் ரூ.10 கோடி வருவாய் கிடைத் துள்ளது.

இந்நிலையில், இதுபோல் ஏற்கெனவே தொலைபேசி, பிராட் பேண்ட் சேவையை பயன்படுத்தி இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே எண்களைப் பெற்று மறுஇணைப்பு பெறலாம்.

இதற்காக வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT