தமிழகம்

கோயம்பேடு உணவு தானிய வளாகம்: திறப்பு விழாவுக்காக பல மாதங்களாக காத்திருப்பு

எஸ்.சசிதரன்

சென்னை பாரிமுனையில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட கோயம்பேடு உணவு தானிய வளாகம், கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகி யும் திறக்கப்படாமல் உள்ளது.

கொத்தவால்சாவடி, பிராட்வே, ஜார்ஜ் டவுன் பகுதிகளில் நெரிசலைக் குறைக்க அரசு திட்ட மிட்டது. அதன்படி கோயம்பேடு பகுதியில் காய்கறி, பூ, பழம் அங்காடிகள் கட்டப்பட்டு 1996-ல் திறக்கப்பட்டன. சென்னை புறநகர் பஸ் நிலையம் (சிஎம்பிடி) 2002-ல் திறக்கப்பட்டது.

பின்னர் பருப்பு, மிளகாய், வாசனைப் பொருட்கள் அங்காடிக ளையும், கோயம்பேட்டுக்கு மாற்ற அரசு முடிவெடுத்தது. 2003-ம் ஆண்டில் திட்டம் உருவாக்கப் பட்டாலும், 2005-ல்தான் அத்திட்டத் துக்கு அரசின் நிர்வாக ஒப்புதல் கிடைத்தது.

இருப்பினும், சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினை, உணவு தானிய வளாகத்துக்காக ஒதுக்கப் பட்ட இடத்தை 2007-ல் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக விட்டுக் கொடுத்தது போன்ற காரணங் களால் கட்டுமானத்தை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சிஎம்டிஏ) திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை. அதன்பிறகு, கோயம்பேடு அIங்காடி நிர்வாகக் குழுக் கட்டிடத்துக்கு அருகில் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, கடந்த 2013-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.

அங்கு தலா 280 சதுர அடி பரப்பில் 364 கடைகளும், 740 சதுர அடியில் 92 கடைகளும், 1200 சதுர அடியில் 36 கடைகளும் என 492 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பாரிமுனையில் பருப்பு, ஏலக்காய், மிளகு, அரிசி, கோதுமை உள் ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் வணிகர்களுக்கு அந்த கடைகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

சிஎம்டிஏ விளக்கம்

சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதா வது: கோயம்பேட்டில் உணவு தானிய வளாகம் கட்டி முடிக்கப் பட்டு தயார் நிலையில் உள்ளது. இது பற்றிய தகவல் தமிழக அரசுக்கு பல மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அது செயல் படத் தொடங்கும் என்றனர்.

பொங்கலில் திறப்பு?

இது குறித்து தமிழ்நாடு அனைத்து மளிகைப் பொருள் வியா பாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறுகையில், ‘‘இந்த கடைகள் திறக்கப்படுவதற்காக பெரு வியாபாரிகள் காத்திருக் கின்றனர். வீடு மற்றும் வணிக நோக்குக்காக அனைத்துப் பொருட்களையும் கோயம்பேட்டில் வாங்க முடியும் என்பதால் வியாபாரம் பல மடங்கு பெருகும். ஆனால் என்ன காரணத்தினாலோ திறக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். இதனை விரைவில் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொங்கல் பண்டிகைக்கு திறப்பார்கள் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அவ்வாறு திறக்கப்பட்ட பிறகு, சென்னையில் மொத்த விலையில் உணவுப் பொருட்களை கோயம்பேட்டில் மட்டுமே விற்க வேண்டும். கோயம்பேட்டை தாண்டி உணவுப் பொருள் சப்ளை லாரிகள் செல்லத் தடை போன்ற உத்தரவுகளை அரசு பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

SCROLL FOR NEXT