தமிழகம்

மாதவரம் சென்னை துறைமுகம் இடையே 18 கி.மீ தூரத்துக்குள் 11 இடங்களில் லஞ்சம் வாங்கும் போலீஸார்: கன்ட்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் புகார்

ஆர்.சிவா

மாதவரத்தில் இருந்து 18 கிமீ தூரத்தில் உள்ள சென்னை துறை முகம் வருவதற்குள் 11 இடங்களில் போலீஸார் லஞ்சம் வாங்குவதாக கன்ட்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை எண்ணூர் விரைவு சாலை காதிகுப்பம் அருகே தலைமைக் காவலர் ஒருவர் பணியில் இருந்தபோது, ஒரு கன்ட் டெய்னர் லாரியை மடக்கி நிறுத்தி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது லாரி ஓட்டுநருக்கும், தலைமைக் காவலருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த ஓட்டுநர், லாரியை இயக்கி தலைமைக் காவலர் அமர்ந்திருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியிருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த தலை மைக் காவலரை அருகே இருந்த வர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள னர். இது தொடர்பான புகாரின் பேரில் செங்குன்றத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமு(27) என்பவரை எண்ணூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, கடந்த 2012-ம் ஆண்டு பணியில் இருந்த சந்தன மாரியப்பன் என்ற போலீஸ்காரரை கன்ட்டெய்னர் லாரி ஏற்றி ஓட்டுநர் ஒருவர் கொலை செய்தது குறிப் பிடத்தக்கது.

கடந்த 2 மாதத்துக்கு முன்னர் போலீஸார் லஞ்சம் கேட்டு துன் புறுத்துவதாகக் கூறி கன்ட்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் சிலர் ஒன் றாகச் சேர்ந்து லாரியை சாலை யில் நிறுத்தி போராட்டமும் செய் தனர். கன்ட்டெய்னர் லாரி ஓட்டு நர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தொடர்ச்சியாக நடக் கும் மோதல்கள் குறித்து விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தன.

இதன்படி, கன்ட்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் பழவேசம், செந்தமிழ் வேலன், சிங்கமுத்து, செல்வம், அந் தோணி ஆகியோர் கூறியதாவது:

வெளி மாநிலங்களில் இருந்து ஒன்று அல்லது 2 நாட்களில் சென் னைக்குள் வந்து விடுவோம். ஆனால் சென்னை அருகே மீஞ் சூரில் இருந்து சென்னை துறை முகத்துக்குள் செல்வதற்கு மட் டும் 2 முதல் 4 நாட்கள் காத் திருக்க வேண்டியுள்ளது. சென்னை துறைமுகத்துக்குள் கன்ட்டெய்னர் களைக் கையாளுவதில் தாமதம் ஏற்படுவதே இதற்குக் காரணம். இதனால்தான் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான லாரிகள் காத் திருக்க வேண்டியுள்ளது. சாலை யில் லாரிகளை நிறுத்துவதை பயன்படுத்தி போலீஸாரும் பணம் வசூலிப்பதை வாடிக்கையாக்கி விட்டனர்.

துறைமுகத்தில் இருந்து மாத வரம் வரை 18 கிமீ தூரத்துக்கு லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இதற்கு இடையில் காசிமேடு, ராயபுரம், மணலி, எண்ணூர், திரு வொற்றியூர், மணலி சாத்தங்காடு என பல காவல் நிலையங்கள் உள்ளன. மேலும், போக்குவரத்து காவலர்கள் என தனியாகவும் உள்ளனர். இந்த 18 கிமீ தூரத்தை கடந்து வருவதற்குள் 11 இடங்களில் போலீஸார் வழிமறித்து லஞ்சம் கேட்பார்கள். ரூ.50 முதல் ரூ.100 வரை எங்களிடம் வாங்கிய பிறகே வண்டியை விடுவார்கள். இல்லையென்றால் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி எங்களை ஓரத்தில் நிறுத்தி விடுவார்கள்.

எண்ணூரில் இருந்து சென்னை துறைமுகம் வரை சுமார் 7 கிமீ தூரத்துக்கு 4 வழிச்சாலை உள் ளது. இதில் லாரிகள் செல்வதற்கு மட்டும் தனியாக ஒரு வழி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த வரிசையை மீறி, மற்ற பயணிகள் செல்லும் சாலை யில் செல்ல வேண்டுமானால், போலீஸாருக்கு கூடுதலாகப் பணம் கொடுத்தால் போதும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போலீஸார் லஞ்சம் வாங்குவது குறித்து அங்கு பணியில் இருந்த போலீஸாரிடம் கேட்டபோது, ‘லாரி ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். விதிமுறைகளைச் சரியாக பின்பற்றி செல்லுபவர்கள் போலீஸாரை குற்றம் சொல்ல மாட்டார்கள்’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT