தமிழகம்

புதிய கட்சியின் கொடி நாளை அறிமுகம்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

புதிய கட்சியின் கொடி சென்னையில் நாளை வெளியிடப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே கட்சிக்கு வைக்க வேண்டும் என பெரும்பாலான ஆதரவாளர்கள் விரும்புவதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், புதிய கட்சி தொடங்குவதாக அண்மையில் அறிவித்தார். கட்சியின் பெயர், கொடி, சின்னம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி, புதிய கட்சியின் கொடி சென்னையில் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT