வேலூரைச் சேர்ந்த இளைஞர் முதல் முயற்சியிலேயே பட்டய கணக் காளர் தேர்வில் அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அகில இந்திய பட்டய கணக் காளர் (சிஏ) தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்த அகத் தீஸ்வரன்(21), 800-க்கு 602 மதிப் பெண் பெற்று அகில இந்திய அள வில் 2-ம் இடம் பிடித்தார். இவர், தனது முதல் முயற்சியிலேயே பட் டய கணக்காளர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அகத்தீஸ்வரன் கூறும்போது, ‘‘தந்தை பட்டய கணக்காளராக இருப்பதால் நானும் பட்டய கணக்காளராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது.
இதற்காக, மேல்நிலைப் பள்ளி யில் வணிகவியல் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தேன். சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விப் பிரிவில் பி.காம் படிப்பில் சேர்ந்தேன். சென்னையில் சில பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். ஒரு நாளைக்கு 13 முதல் 15 மணி நேரம் படித்தேன். முதல் முயற்சியில் இன்டர்நல், பைனல் தேர்வில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இறுதித் தேர்வுக்காக கடந்த 4 மாதங்களாக கடுமையாக படித்தேன்’’ என்றார்.