தமிழகம்

வைரஸ் காய்ச்சல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு இலவச எண்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் தொடர்பான தகவல்களை அளிக்கவும் பெறவும் 24 மணி நேர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் நகராட்சி நிர்வா கம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் ஆகியோர் தலைமை யில் சென்னையில் நேற்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் அதி காரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அமைச்சர்கள் வழங்கிய அறி வுரைகள் மற்றும் தகவல்கள்:

கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வீடுகளில் நீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். குடி நீரைக் காய்ச்சி பருக வேண்டும். நோய் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், கொசு ஒழிப்புப் பணிகளை போர்க்கால அடிப் படையில் மேற்கொள்ளவும் நட வடிக்கை வேண்டும். சுகாதாரத் துறை களப்பணியாளர்களுக்கு தொடர் நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.

90 சோதனை மையங்கள்

வட்டார அளவில் விரைவு செயல்பாட்டுக் குழுக்கள் அமைக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களைக் கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க உதவும் ‘எலிசா’ சோதனை மையங் களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்து, ரத்த அணுக் கள், கருவிகள் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

காய்ச்சல் தொடர்பான தகவல் களை அளிக்கவும், பெறவும் சென்னை பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் உள்ள தொலை பேசிகளில் (044 24350496, 044 24334811 மற்றும் 94443 40496) 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அரசு மருத்துவ மனைகளில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு ஆகிய வற்றை வழங்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் உரிய மருத்துவ ஆலோசனை இல்லாமல், மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கி பொதுமக்கள் சாப்பிடக் கூடாது. மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT