தமிழகம்

கதிராமங்கலத்தில் 3-வது நாளாக கடையடைப்பு: வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் ஊர்வலம்

செய்திப்பிரிவு

கதிராமங்கலத்தில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள், மாணவ, மாணவிகள் வாயில் கருப்புத் துணி கட்டி நேற்று மவுன ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து அங்கு 3-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் கடந்த 30-ம் தேதி ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அப் பகுதி மக்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதையடுத்து கதிராமங்கலத் தில் போலீஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். காவல் துறை யைக் கண்டித்து 3-வது நாளாக நேற்றும் அங்கு கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. தெருக்கள், கடைவீதிகளில் பொதுமக்கள் கருப்புக் கொடி ஏற்றியிருந் தனர்.

மேலும், மாவட்ட நிர்வாகத் தைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வாயில் கருப்புத் துணி கட்டி நேற்று அமைதி ஊர் வலம் நடத்தினர். வெள்ளாளத் தெருவில் தொடங்கிய ஊர் வலம் கருப்பட்டி தெருவில் முடி வடைந்தது. அங்கு பொதுமக்கள் தரையில் அமர்ந்து, ஓஎன்ஜிசி நிர்வாகம் இங்கிருந்து முழுமை யாக வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர்.

கதிராமங்கலத்தில் ஏராள மான போலீஸார் குவிக்கப்பட் டுள்ளதால் பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதையடுத்து, நேற்று போலீ ஸாரின் எண்ணிக்கை குறைக்கப் பட்டு, 50 பேர் மட்டுமே பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களும் ஊருக்குள் இல்லா மல், ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகள் பகுதியில் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கசிவு குழாய் மாற்றம்

இதற்கிடையே, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய்க் குழா யில் ஏற்பட்ட கசிவு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது. அந்த குழாயை அகற்றிவிட்டு, நேற்று புதிய குழாயை ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் பொருத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை

கதிராமங்கலம் விவகாரம் தொடர்பாக, ஓரிரு நாட்களில் பொதுமக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கூறியுள்ளார். ஆனால், ‘கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும், நிபந்தனை இன்றி விடுவித்தால் மட்டுமே, பேச்சுவார்த்தைக்கு வருவோம். எங்களது போராட்டம் அமைதியான முறையில் தொடரும்’ என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT