தமிழகம்

கிரண்பேடி கோப்புகளை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்: புதுச்சேரி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நியமன எம்எல்ஏக்கள் விவகாரத் தில் கோப்புகளை திருத்தும் பணி யில் ஆளுநர் கிரண்பேடி ஈடுபட் டுள்ளதாக, முதல்வரின் நாடாளு மன்ற செயலர் லட்சுமிநாரா யணன் எம்எல்ஏ குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: புதுச் சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கைகள் நாடு முழுக்க புதுச்சேரிக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. மக் களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசை களங்கப் படுத்த பாஜகவின் அனைத்து உத் தரவுகளையும் செயல்படுத்தக் கூடியவராக கிரண்பேடி உள்ளார்.

புதுச்சேரியில் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தின்போது, சட்டப்பேரவைக்கு நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை என்று தெரி வித்தார். ஆனால், மத்திய உள் துறை அமைச்சகத்துடன் சேர்ந்து நியமன எம்எல்ஏக்களை பரிந்துரை செய்தது போன்ற கோப்புகளை அவர் தயாரித்து வருவதாக டெல்லியில் இருந்து நம்பத் தகுந்த தகவல் வந்துள்ளது.

நியமன எம்எல்ஏக்கள் தொடர் பாக நான் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் மாநில அரசுக்கு சாதக மாக தீர்ப்பு வரவுள்ளதால் இது போல் செயல்படுகின்றனர். இதை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத் திலும் எடுத்துரைப்போம். திருத்தம் செய்த கோப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், அதற்கும் தண்டனை பெற்றுத் தருவோம் என்று எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன்.

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கும் போது, சட்ட மசோதாவை தாக்கல் செய்யும். அதன்படி நிதி கொடுத்துத்தான் ஆக வேண் டும். ஒதுக்கப்பட்ட நிதியை குறைப் பதாக இருந்தால் நாடாளு மன்றத்தில் மீண்டும் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட வேண் டும். எனவே புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி கிடைப்பதில் எந்த தடையும் இல்லை.

சட்டப்பேரவையை பொருத்த வரை பேரவைத் தலைவரின் முடிவே ஏகபோக முடிவு. எனவே பாஜகவை சேர்ந்தவர்கள் நியமன எம்எல்ஏ என்று கூறி சட்டப்பேரவைக்குள் வர முடியாது என்றார்.

SCROLL FOR NEXT