ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும். தமிழக மக்களின் நலன் காக்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டா லின்:
ஹைட்ரோ கார்பன் திட்டத் துக்கு அனுமதியளிப்பதில்லை என் பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால், மத்திய அரசு இதை நிறைவேற்றியே தீருவோம் என செயல்படுகின்றது. ஒப்பந்தம் கோரப்பட்டு, திட்டம் உறுதி செய்யப் பட்டுள்ளது. அங்கு நெடுவாசல் பகுதியில் தொடர்ந்து 2, 3 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஒரு முடிவு ஏற்பட நீங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
முதல்வர் கே.பழனிசாமி:
மத்தி யில் பாஜக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நீங்கள் கூட்டணியில் இருந்தீர்கள். ஆனால், நாங்கள் அப்படியில்லை. இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நாங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து வருகிறோம். விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளோம்.
மு.க.ஸ்டாலின்:
மத்தியில் நாங் கள் கூட்டணியில் இருந்த போது என்எல்சி, சேலம் உருக்காலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தோம்.
முதல்வர் கே.பழனிசாமி:
ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசில் நீங்கள் பங்கு பெற்றிருந்தீர்கள். உங்களிடம் அதிகாரம் இருந்தது. எங்களுக்கு அப்படியில்லை. இருப்பினும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். மக்கள் நலன் நிச்சயம் காக்கப்படும்.
அமைச்சர் பி.தங்கமணி:
என்எல்சி விவகாரத்தில் நீங்கள் மத்திய அரசி டம் அழுத்தம் கொடுத்து பெற்றது என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.