தமிழகம்

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளில் இருந்து தங்கம், வைர நகைகள் இருந்த லாக்கர்கள் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து தங்கம், வைர நகைகள் அடங்கிய லாக்கர்கள் மீட்கப்பட்டன.சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடைக்கு சொந்தமான 7 மாடி கட்டிடத்தில் கடந்த மே மாதம் 31-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் சேதமடைந்த கட்டிடம் பின்னர் இடிக்கப்பட்டது. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி பல நாட்களாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இடிபாடுகளில் இருந்து ஒரு லாக்கர் பெட்டி மீட்கப்பட்டது. அதில் ஏராளமான பணம் இருந்ததாக கூறப்பட்டது.

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத்தளத்துக்கும் கீழே உள்ள அறையில் மேலும் சில லாக்கர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதி யில் பலத்த போலீஸ் பாதுகாப் புடன் நேற்று இடிபாடுகள் அகற்றப் பட்டன. மீட்புப் பணியில் ஈடுபட்ட வர்கள், சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலை யில் இடிபாடுகளுக்கு இடையில் கிடந்த 4 லாக்கர்களை ஊழியர்கள் பத்திரமாக வெளியே எடுத்து வந்த னர். பின்னர், அவற்றை தனியார் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர். அந்த லாக்கர் களில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு லாக்கரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT