தமிழகம் முழுவதும் 13 இஎஸ்ஐ மருந்தகங்கள், 6 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலன், வேலைவாய்ப் புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்களும் நல வாரிய பயன்களை பெறுவதை உறுதி செய்ய ரூ.26 லட்சம் செலவில் சிறு கணினியைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே பதிவு மேற் கொள்ளப்படும். பட்டாசு தொழிற் சாலைகளில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படங்கள் தயாரிக்கப்படும்.
2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், தங்களின் பதிவு மூப்பினை மீண்டும் பெறும் வகையில் 2017-18ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் சுமார் 2 லட்சம் பேர் பயன்பெறுவர்.
தமிழகத்தில் பழங்குடியின ருக்காக இயங்கி வரும் 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களின் திறமையை மேம்படுத்தி பயிற்சி முடித்தவுடன் பணியமர்த்துவதற்கு சிறப்பு பணிய மர்த்தும் பிரிவு ஏற்படுத்தப்படும்.
திறன் பயிற்சி அளிப்பதிலும் வேலைவாய்ப்பு வழங்குவதிலும் சிறந்து விளங்கும் நிறுவனங் களுக்கு ரொக்கத்துடன் கூடிய விருதுகள் வழங்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கும் திறன் பயிற்சிகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆண் டுக்கு 2 முறை திறன் பயிற்சி முகாம் நடத்தப்படும். இந்த நிதி ஆண்டில் முதல்கட்டமாக 2 ஆயிரம் இளைஞர்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளை எதிர் கொள்ள ரூ.2 கோடியில் சிறப்பு திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். திறன் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு விடுதிக் கட்டணமாக மாதம் ரூ.3 ஆயிரம் என 6 மாதங்களுக்கு வழங்கப்படும்.
பல்லாவரம், நந்தம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி உட்பட 13 இடங்களில் உள்ள இஎஸ்ஐ மருந்தகங்கள், ரூ.5.12 கோடியில் 6 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த் தப்படும். அனைத்து இஎஸ்ஐ மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.