தமிழகம்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குறைகள் குறித்து கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்: வசந்தகுமார் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதம்:

ஹெச்.வசந்தகுமார்:

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின்போதுதான் ஜிஎஸ்டியை கொண்டு வந்தோம். ஆனால், அப்போது 18 சதவீதம் என்ற அள வில் நாடு முழுவதும் ஒரேவித மான வரி அமல்படுத்த முடி வெடுக்கப்பட்டது. தற்போது பல் வேறு விதமாக வரி விதிக்கப் படுகிறது. ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு அளித்து, வரி செலுத்தும் முறை மாறி, தற்போது ஒரு மாதத்தில் 3 முறை கணக்கு காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வணிகர்களை பாதிக்கிறது.

அமைச்சர் கே.சி.வீரமணி:

ஆன்லைன் வணிகப் பதிவு வந்துவிட்டதால், தினமும் கணக்கை வணிகர்கள் பதிவு செய்யலாம். தற்போது 95 சதவீத வணிகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் கணக்குகளை அளிக்கத் தயாராகி வருகின்றனர்.

அமைச்சர் டி.ஜெயக்குமார்:

ஏற்கெனவே பலமுனை வரி இருந்தது. தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் 5, 12, 18, 28 என வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி பதிவுக்கு 95 சதவீத வணிகர்கள் மாறிவிட்டனர். மாறுவதில் பிரச்சினை ஏதும் இல்லை.

வசந்தகுமார்:

வணிகர்கள் எல் லோரும் படித்தவர்கள் இல்லை. 40 சதவீத சிறு வணிகர்களுக்கு கணினி குறித்து தெரியாது.

அமைச்சர் வீரமணி:

95 சதவீத வணிகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள நிலையில், 40 சதவீதம் பேருக்கு கணினி குறித்து தெரியாது என்பது ஏற்புடையதல்ல.

வசந்தகுமார்:

குடிசைத் தொழிலான கடலை மிட்டாய், பிஸ்கெட், சாக்லேட் போன்றவற்றுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார்:

ரூ.20 லட்சத்துக்குள் வியாபாரம் செய்வோருக்கு வரி இல்லை. அதற்குமேல் உள்ளவர்களுக்கும் குறைந்த அளவில் 1 அல்லது 2 சதவீதம்தான் வரி விதிக்கப்படுகிறது. கையால் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய், பிஸ்கெட் போன்றவற்றுக்கு வரி இருக்காது.

வசந்தகுமார்:

சிவகாசியில் குடிசைத் தொழிலாக பட்டாசு தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் அதிக அளவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படு கிறது.

அமைச்சர் ஜெயக்குமார்:

10 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, ஹோட்டல் உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்தும் வரும் ஆகஸ்ட் முதல் சனிக்கிழமையில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.

வசந்தகுமார்:

கிரைண்டருக்கு மோட்டார் தனியாக வாங்கி, இதர பாகங்களுடன் பொருத்தி விற்போருக்கு வரியை குறைக்க வேண்டும். பூஜைப் பொருட் களுக்கு வரி குறைக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார்:

பூஜைப் பொருட்களில் பலவற்றுக்கு வரியே இல்லை.

பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்:

தென்னை விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு டெட்ரா பேக்கில் வரும் இளநீருக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும். கிரைண்டருக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார்:

பேரவை துணைத் தலைவர் கோரிக்கை மட்டுமின்றி, ஜிஎஸ்டி மீதான அனைத்து குறைகள் குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

SCROLL FOR NEXT