சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:
உற்பத்தி சார்ந்த தொழில் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எரிசக்தி தணிக்கையினை பியூரோ ஆப் எனர்ஜி எபிஷியன்சி (பிஇஇ) மூலம் அங்கீகரிக்கப்பட்ட தணிக் கையாளர்களைக் கொண்டு தங் கள் நிறுவனங்களில் தணிக்கை மேற்கொள்ளலாம். இத்தணிக் கையை மேற்கொள்ளும் நிறுவ னங்களின் 50 சதவீத தணிக்கை செலவினை அரசு மானியமாக வழங்கும். அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், எரிசக்தி தணிக்கை யில் அறிவுறுத்தியபடி பழைய இயந்திரங்களை புதுப்பித்தல், மாற்றுதல் அல்லது தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் சிறு, குறு, நடுத் தர தொழில்நிறுவனங்கள் இயந் திர தளவாடங்களை புதுப்பித்த லுக்காக 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவ ரங்களுக்கு மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத் துறை, திரு.வி.க இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலும், 044-22501620, 22501621, 22501622 என்ற தொலைபேசி எண்களி லும் தொடர்பு கொள்ளலாம்.