சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் நாளை நடைபெற உள்ள மனித உரிமை ஆர்வலர் கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் நேற்று சென்னை வந்தார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் தேசிய அளவில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வித்யோதயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
அதில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன், தென்னாப் பிரிக்க அரசமைப்பு நீதிமன்ற நீதிபதி சக்காரியா முகமது யாகூப் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அதற்காக முதல்வர் விக்னேஷ்வரன், சென்னைக்கு நேற்று விமானம் மூலமாக வந்தார். அவர் அந்நிகழ்சியில் பங்கேற்று ‘பாதுகாப்பையும், இறையாண்மையையும் காத்தல்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.