தமிழகம்

விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமை இயக்க மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு 96-வது பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யாவின் 96-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்க ரய்யாவின் 96-வது பிறந்த நாள் நேற்று குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடப்பட்டது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனக ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பெரியசாமி உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், க.பீம்ராவ், க.உதயக்குமார், டி.ரவீந்திரன், சி.கல்யாணசுந்தரம், எஸ்.கண்ணன், வெ.ராஜசேகரன், எஸ்.எஸ்.சுப்பிரமணியம், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். காயிதே மில்லத் கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் கள், தொழிற்சங்க, வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகளும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் பிரகாஷ்காரத், பிருந்தா காரத், ஏ.கே.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள் ளிட்டோர் தொலைபேசி மூலம் சங்கரய்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT