தமிழகம்

அண்ணாமலைப் பல்கலை.யில் உதவிப் பேராசிரியர்கள் உட்பட 6 பேர் பணி நீக்கம்

செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேராசியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

அரசு நிர்வாகத்தின்கீழ் பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியதையடுத்து பலர் போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்திருப்பதாக தனி அதிகாரிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தனி அதிகாரி உத்தரவின்பேரில் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் சான்றிதழ் சரிர்பார்ப்பு பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்றன.

இதில் சுமார் 150 பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

ஊழியர்களிடமிருந்து விளக்க நோட்டீஸைப் பெற்றுக் கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது ராஜ்மோகன், சுப்ரமணி என்ற 2 உதவிப் பேராசிரியர்கள், பாண்டியன், அருண் உள்ளிட்ட 4 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

SCROLL FOR NEXT