சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவ ராகப் பேராசிரியர் ய.மணிகண்டன் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.
தஞ்சை சரஸ்வதி மகால் தமிழ்த் துறையிலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக் கியத் துறையிலும் பல ஆண்டு கள் பணியாற்றிய ய.மணிகண் டன், 2015-ல் தமிழ் மொழித்துறை பேராசிரியராகவும் தமிழ் மேம் பாட்டுச் சங்கப் பலகைத் துறை தலைவராகவும் இருந்தார். குடி யரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது மேற்பார்வையின்கீழ், ஆய்வு செய்து 15 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலி யத் தமிழ்ச்சங்கத்தின் அழைப் பின்பேரில் ஆஸ்திரேலியா சென்று பாரதிதாசன் 125-ம் ஆண்டு விழாக்களில் சிறப்புரை கள் நிகழ்த்தியுள்ளார். பாரதியி யல், பாரதிதாசன் ஆய்வுகள், தமிழ் யாப்பிலக்கணத் துறை ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்புகளை நல்கியுள்ளார். 35 நூல்களை எழுதியுள்ளார்.
இந்த ஆண்டு ‘தி இந்து’ நடத்திய இலக்கியத் திருவிழா வில் (LIT FOR LIFE) “பாரதி: அறிந்ததும் அறியாததும்” என் னும் நிகழ்ச்சியில் ஆ.இரா.வேங்கடாசலபதியுடன் பங் கேற்று, பாரதியின் அறியப்படாத படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.