தனியாரிடம் இருந்து 3,330 மெகாவாட் மின்சாரம் 15 ஆண்டு காலத்துக்கு அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதன் மூலம் அமைச்சர்களும் ஆளுங்கட்சி யினரும் லாபம் அடைவதாகவும், இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று செய்தியா ளர்களிடம் அவர் கூறியது: அரசு அலுவலகங்களில் இப்போ தைய முதல்வர் படம் வைக்கப் படாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட் டுள்ளது. எந்த விதியின்படி அரசு அலுவலகங்களில் அவர் படம் வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, தனியாரும் பால் விலையை உயர்த்தி இருக்கிறது. இதனால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பால் விலையைக் குறைக்க மானியம் வழங்கலாம். இதற்கு ரூ. 90 கோடி வரையில் மட்டுமே செலவு ஏற்படும் நிலையில் அதை தற்போதைய அரசு செய்யாமல் இருக்கிறது.
அம்மா பெயரில் கட்டிடம் கட்டவும், சினிமா அரங்கு கட்டவும் செலவு செய்யும் ஆளுங் கட்சியினர், ஏழை எளிய மக்களுக்கு பயன்படும்படியான எந்த திட்டத்தையும் செயல் படுத்தவில்லை.
தனியாரிடம் 3330 மெகாவாட் மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்க 15 ஆண்டு கால ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் புதிய மின் திட்டங்களை தொடங்க அரசு திட்டமிடவில்லை.
அதிக கட்டணத்தில் மின்சாரத்தை வாங்கிவிட்டு மின் கட்டணத்தை உயர்த்த இருக்கின்றனர்.
தனியாரிடம் மின்சாரம் வாங்க 15 ஆண்டு கால ஒப்பந்தம் போடப்பட்டதில் ஆளுங் கட்சியினரும், அமைச்சர் களும் லாபம் அடைந்து இருக் கின்றனர். இது குறித்து முறையான விசார ணை நடத்த வேண்டும்.
ஆளுங்கட்சியினர் அனைத் தையும் வியாபார நோக்கத்துடன் பார்த்து செயல்படுகின்றனர். மின்சார பிரச்சினையால் தொழிற் சாலைகள் பாதிக்கப்படுவதையோ அல்லது பொருளாதார பிரச்சி னைகள் ஏற்படுவது பற்றியோ ஆட்சியாளர்கள் கவலைப்பட வில்லை.
கிரானைட் பிரச்சினை குறித்து விசாரிக்க நீதிமன்றம் விசாரணை அதிகாரியாக சகாயத்தை நியமனம் செய்து உத்தரவிட்டும் இதில் வேகம் காட்டவில்லை. வேகம் காட்டினால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அதிமுக அரசு இருக்கிறது. நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் இந்த அரசு ஏற்பதில்லை என்றார் அவர்.