தமிழகம்

சுனந்தா புஷ்கர் மர்ம மரணம்: எஸ்ஐடி விசாரணை கேட்டு சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் குறித்து சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

51 வயதான சுனந்தா புஷ்கர் கடந்த 2014, ஜனவரி 17-ம் தேதி இரவு, டெல்லி யில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார் சசிதரூர் இடையிலான உறவு தொடர்பாக, மெஹர் தரார் உடன் ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மறுநாள் சுனந்தா இறந்து கிடந்தார். இது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், “நம் நாட்டில் குற்ற வழக்கு நடைமுறைகள் எந்த அள வுக்கு தாமதம் வாய்ந்தவை என்பதற் கும் பணம் மற்றும் செல்வாக்கு மிகுந்த வர்கள் இவற்றை எந்த அளவுக்கு சீர்குலைக்கலாம் என்பதற்கும் சுனந்தா வழக்கு சிறந்த உதாரணம் ஆகும்.

இந்த வழக்கை, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். இக்குழுவில் புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை, உளவுத் துறை, டெல்லி காவல்துறை அதிகாரிகள் இடம் பெற வேண்டும்” என்று கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT