தமிழகம்

கதிராமங்கலத்தில் 9-வது நாளாக கடையடைப்பு: இன்று அரசியல் கட்சியினர் கருத்து கேட்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் இன்று பொதுமக்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து கருத்துக் கேட்க உள்ளனர். அங்கு 9-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். அங்கு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 10 பேரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 9-வது நாளாக அங்கு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

குழு அமைப்பு

இதற்கிடையே, கதிராமங்கலத் தில் உள்ள முக்கியஸ்தர்களைக் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வெளியிலிருந்து வரும் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

மக்களிடம் கருத்து கேட்பு

கதிராமங்கலம் மக்களிடம் இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளை கேட்டறிய உள்ளனர். அதன்படி, சிவராமபுரத்திலிருந்து ஊர்வல மாகச் செல்லும் அரசியல் கட்சியினர் அய்யனார் கோயிலில் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டறியவுள்ளனர்.

இதில், உலக தமிழர் பேர மைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங் கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் மற்றும் திமுக, தமாகா நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

SCROLL FOR NEXT