வெளிச்சந்தையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் தக்காளி உற்பத்தியில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. அந்த மாநிலங்களில் உற்பத்தியாகும் தக்காளி, வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்துவிட்டது. அதனால், தக் காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கோயம்பேட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப் பட்டது. சில்லறை விற்பனையில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப் படுகிறது. அன்றாட சமையலுக்கு தக்காளி முக்கியம் என்பதால், அதிக விலை கொடுத்து வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப் பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெளிச்சந்தை யில் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத் துறை சார்பில் பண்ணை பசுமை கடை களில் தக்காளி கிலோ ரூ.66-க்கு விற்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் பல்வேறு கூட்டு றவு சங்கங்கள் சார்பில் 43 நிலையான பண்ணை பசுமை கடைகள், 2 நகரும் கடைகள் என மொத்தம் 45 கடைகள் இயங்கி வருகின்றன. தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.66-க்கு விற்கப்பட்டு வருகிறது.
மேலும் உருளைக்கிழங்கு ரூ.16 (வெளிச் சந்தையில் ரூ.22), பெரிய வெங்காயம் கிலோ ரூ.13 (வெளிச்சந்தையில் ரூ.18), சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.80-க்கு (வெளிச்சந்தையில் ரூ.140) என்ற மலிவு விலையில் விற்று வருகிறோம். தற்போது வட தமிழகத்தில் இந்த காய்கறிகள் விளைச்சல் இல்லை. வெளி மாநி லங்களில் இருந்துதான் பெற வேண்டியுள்ளது. அதனால் தற் காலிகமாக 4 காய்கறிகளை மட்டும் கோயம்பேடு சந்தையில் வாங்கி வருகிறோம்.
பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் விதமாக இந்த 4 காய் கறிகளும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட 140 நியாயவிலைக் கடைகளிலும் தற்போது மலிவு விலையில் விற்கப்பட்டு வருகின் றன. இதை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம் என்றார்.