டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணி களுக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரூப்-4 தேர்வில் அடங்கிய பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இத்தேர்வு தொடர்பான முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவல கத்தில் நடைபெற உள்ளது. இளநிலை உதவியாளர், வரை வாளர், நில அளவர் பதவிகளுக்கு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரையும், தட்டச்சர் பணிக்கு ஆகஸ்ட் 16 முதல் 30 வரையும், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு செப்டம்பர் 4 முதல் 6 வரையும் கலந்தாய்வு நடைபெறும்.
இணையதளத்தில் பட்டியல்
இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கூறியுள்ளார்.