தமிழகம்

பொதுப்பணித் துறை கட்டுமான பணிகளுக்கு செயற்கை மணலை பயன்படுத்த உத்தரவு

செய்திப்பிரிவு

பொதுப்பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு செயற்கை மணலை (எம்-சாண்ட்) பயன்படுத்திக் மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் ஆற்று மணல் பற்றாக்குறையை கருத்தில்கொண்டு எம்-சாண்ட் (கருங்கல் ஜல்லி துகள்) எனப்படும் செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், அதன் தரம் குறித்த அச்சம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மத்தியில் இருப்பதால், தங்களது கட்டுமானப் பணிகளில் பயன் படுத்த தயக்கம் காட்டி வருகின் றனர்.

இந்நிலையில், பொதுப்பணித் துறை கட்டுமானங்களில் இனிமேல் செயற்கை மணலை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி பொறியாளர்களுக்கு தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) ஆர்.ஜெயசிங் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். தரமான செயற்கை மணலை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்தும் அந்த சுற்றறிக் கையில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

சுற்றறிக்கை விவரம் வருமாறு:

செயற்கை மணலை இனி சி.எஸ்.சாண்ட் (Crushed Stone Sand) என அழைக்க வேண்டும். ஏற்கெனவே பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிகளுக்கு பிஐஎஸ் (BIS) தரம் கொண்ட சி.எஸ்.சாண்ட் பயன்படுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், அதை பயன்படுத்த அதிகாரிகள் இடையே தயக்கம் நிலவி வந்தது.

நல்ல தரமான முறையில் தயாரிக் கப்பட்ட சி.எஸ்.சாண்ட் பயன் படுத்தி கட்டிடம் கட்டினால் நீண்ட நாள் உறுதியாகவும், வலிமையா கவும் இருக்கும். எனவே, தரமான சி.எஸ்.சாண்ட் பயன்படுத்தி பொதுப்பணித்துறை கட்டிடங்களை கட்ட அதிகாரிகள் தயக்கம் காட்டக் கூடாது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான சி.எஸ்.சாண்ட் எது?

சி.எஸ்.சாண்டை இரு கைகளி லும் தேய்த்துப் பார்த்து, அதன் மூலம் ஒட்டாத தன்மை, குவாரி டஸ்ட் (Quarry Dust) உள்ளிட்ட வற்றின் தன்மையை தெரிந்து கொள் ளலாம். சி.எஸ்.சாண்ட் ஒவ்வொன் றும் ஏறத்தாழ கனசதுர வடிவத்தை ஒட்டி இருக்க வேண்டும்.

மேலும் ஆய்வகங்களிலும் சோதனை செய்து கொள்ளலாம். அதேவேளையில் குவாரி கிரஷர் களில் கிடைக்கும் அனைத்து உப பொருட்களும் சி.எஸ்.சாண்ட் கிடையாது. கனசதுர வடிவிலும், நுண் துகள்கள் இல்லாததுமே தரமான சி.எஸ்.சாண்ட் ஆகும்.

SCROLL FOR NEXT