‘தி இந்து’ தமிழ் நாளிதழ், கோவை நன்னெறிக் கழகம், சரோஜினி நடராஜ் அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற உள்ள இளைஞர்களுக்கான இசைக்கருவிகள் இசைக்கும் போட்டிக்கு (இசைஞர் 2017) விண்ணப்பிக்க, இம்மாதம் 15-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெறு கின்றன. அந்த வகையில், இசைக்கருவிகளை இசைக்கும் இளம் தலைமுறையினரின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 13 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். நரம்புக் கருவிகள் (வீணை), தந்திக் கருவிகள் (கிடார்), தாள இசைக் கருவிகள் (மிருதங்கம்), காற்றுக் கருவிகள் (புல்லாங்குழல்), நாட்டுப்புற இசைக்கருவிகளில் (பறை) தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.
இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 29-ம் தேதியும், இறுதிப்போட்டி 30-ம் தேதியும் கோவை சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகின்றன. போட்டியில் கலந்துகொள்பவர்கள், அவரவர் இசைக்கருவிகளை எடுத்துவர வேண்டும். உணவு மற்றும் பயணப்படி வழங்கப்படமாட்டாது.
பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றுடன், இசைக்க விரும்பும் கருவியின் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். >http://bit.ly/hindu-instrumental-contest என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
கோவை எல்.ஐ.சி. சாலை, ஏ.டி.டி. காலனியில் உள்ள ‘தி இந்து’ அலுவலகத்திலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை, இம்மாதம் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளில், வயதுச் சான்றை (பள்ளி / கல்லூரி அடையாள அட்டை) கொண்டுவர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 9843131323, 0422-2212572 ஆகிய எண்களிலோ, mothertamil2017@gmail.com என்ற மின்னஞ்சலிலோ, https://mothertamil.wordpress.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியை ரேடியோ சிட்டி, காட்ஸ்வில்லா ரிசார்ட், உடுமலை டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.