தமிழகம்

ஜிஎஸ்டி மூலம் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சி: சென்னையில் 100 இடங்களில் நடத்த திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் 100 இடங்களில் ஜிஎஸ்டி மூலம் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சி வழங்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரி வித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறிய தாவது: மக்களுடனான தொடர்பை அதிகப்படுத்தும் நோக்கில் bjptnforppl என்ற ட்விட்டர் கணக்கைத் தொடங்கியுள்ளோம். இதில், மக்கள் தங்களது கோரிக் கைகளை பதிவு செய்யலாம்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்த் பற்றி மக்கள் முழு மையாகத் தெரிந்து கொள்வதற் காக Ram Nath Kovind App என்ற கைபேசி செயலியை உருவாக்கி யுள்ளோம். அதில் உள்ள ஒரு பொத் தானை அழுத்தி அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.

ஜிஎஸ்டி என்பது வரி குறைப்பு நடவடிக்கைதான் என்று பொது மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளோம். ஜிஎஸ்டியால் வேலைவாய்ப்பை நம் கையில் இருந்தே உருவாக்க முடியும். அதற்கு இலவச பயிற்சி அளிப்ப தற்காகத்தான் www.pmwelfareschemetn.in என்ற இணையதளத்தை உருவாக்கி யுள்ளோம்.

10-ம் வகுப்பு முடித்திருந்து, கணினியை கையாளத் தெரிந் திருந்தாலே ஒரு நிறுவனத்தில் அல்லது சிறு வணிகர்களிடம் ஜிஎஸ்டி ஆலோசகராக வேலைக் குச் சேர முடியும். பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக் கும் நோக்கில் இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் பயிற்சி அளிக்கவுள்ளோம்.

இதற்கு இணையதளத்தில் 6 பிரிவுகளாக தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் பயிற்சி அளிக்கப்படும். அடித் தட்டு மக்கள் வசிக்கும் பகுதி களில் நேரடிப் பயிற்சி அளிக்கப் படும். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 2 வார்டுக்கு ஒரு இடம் வீதம் 100 இடங்களை பயிற்சிக்காக தேர்ந்தெடுத்துள் ளோம். பின்னர் மாநிலம் முழுவதும் இப்பயிற்சி விரிவுபடுத்தப்படும்.

கதிராமங்கலத்தில் போடப்பட் டுள்ள குழாய்கள் பாஜக ஆட் சிக்கு வந்தபிறகு போடப்பட்டவை அல்ல. அங்கு காவல்துறையி னரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

SCROLL FOR NEXT