தமிழகம்

இந்தியன் வங்கியில் ஜிஎஸ்டி சேவைகள் தொடக்கம்: நெட் பேங்கிங் மூலமும், நேரிலும் செலுத்த முடியும்

செய்திப்பிரிவு

இந்தியன் வங்கியில் ஜிஎஸ்டி சேவைகள் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இனி இந்தியன் வங்கி மூலம் ஜிஎஸ்டி செலுத்தலாம்.

இது தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்க மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை, தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஆகியவை இந்தியன் வங்கிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. அதேபோல ஜிஎஸ்டி கவுன்சிலும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனவே ஜிஎஸ்டியை வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். இந்தியன் வங்கியில் கணக்கு இல்லாதோர் கவுன்டர்களில் பணம், காசோலை, டிடி மூலமாக செலுத்த முடியும்.

மேலும் ‘2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு' என்ற அரசின் திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ‘இந்த் அவாஸ்' என்ற வீட்டுக் கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும்.

இந்தியன் வங்கி ஏற்கெனவே பேஸ்ஃபுக், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களுடன் இணைந் துள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் மூலமும் இணைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டங்களை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் காரத் தொடங்கி வைத்தார். செயல் இயக்கு நர்கள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச் சார்யா, பொதுமேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT