சிட்லப்பாக்கம் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் கொளுந்துவிட்டு எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்குள்ள பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டனர்.
சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சேகர மாகும் குப்பைகள் சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் கொட்டப்படுகின்றன. இந்த இடத்துக்கு அருகே, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, காவல் நிலையம், சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம், தபால் நிலையம், மத்திய அரசின் தானிய கிடங்கு, துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி தலைமை அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பை காரணமாக ஏரி நீர் மாசடைவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.
இதுவரை 6 முறைக்கு மேல்...
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு இந்த குப்பைக் கிடங் கில் தீப்பிடித்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்த னர். தாம்பரம் தீயணைப்பு நிலை யத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி, பிற்பக லில் தீயை அணைத்தனர். தீ முழு வதுமாக அணைத்த பின்னரும், குப்பைகளில் இருந்து புகை வந்துகொண்டிருந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு பிரச்சி னைகளால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 6 முறைக்கு மேல் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்து குறித்து மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் மனோகரன் கூறும்போது, “சமூக விரோதிகளால் அடிக்கடி இங்கு தீ விபத்து ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இங்கிருந்து கீரப்பாக்கம் கிராமத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு இருப்பதால் சற்று காலதாமதம் ஆகிறது” என்றார்.