தமிழகத்தில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் கே.பழனிசாமி முதல் வாக்கை பதிவு செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில், முதல்வர் பழனிசாமி 10.03 மணிக்கு முதல் நபராக வாக்களித்தார். வாக்களித்து விட்டு வந்தவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் கே.பழனிசாமி: குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் வாக்கை பதிவு செய்துள் ளேன். இது ரகசிய வாக்குப்பதிவு என்பதால் யாருக்கு வாக்க ளித்தோம் என்பதை கூறக் கூடாது. அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை ஏற்கெனவே முடிவு செய்து அறிவித்துள்ளோம்.
ஓ.பன்னீர்செல்வம்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மகத்தான வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப் பேற்பார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: குடியரசுத் தலைவர் தேர்தலில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆர்வத் துடன் வந்து வாக்களித்தது வரவேற்கத்தக்கது.
தங்க தமிழ்ச்செல்வன்: அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சித் தலைமை, பொதுச்செயலாளர் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு வாக்களித்துள்ளோம்.
கருணாஸ்: இது மிக மகிழ்ச்சியான தருணம். தமிமுன் அன்சாரி, தனியரசுடன் இணைந்து மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் ஒரே முடிவை எடுத்துள்ளோம். இந்தத் தேர்தலில் தோழமை சார்ந்த முடிவை எடுத்துள்ளேன்.
துரைமுருகன்: எங்கள் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கே.ஆர்.ராமசாமி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முறையாக நடக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனை வரும் வாக்களித்துள்ளனர். எங்கள் வேட்பாளர் மீரா குமாரின்
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார் என நம்பு கிறோம்.
கேரள எம்எல்ஏ பறக்கல் அப்துல்லா: சிகிச்சைக்காக சென்னை வந்ததால், எனது வாக்கை இங்கு பதிவு செய்தேன். இன்னும் 3 நாட்கள் சென்னையில் தங்கியிருப்பேன். முதல்முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது.