தமிழகம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:

மெய்யநாதன் (திமுக எம்எல்ஏ):

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து 90வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் பாதிக்கும். குடிநீர் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இருந்து கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை ரத்து செய்ய இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்:

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த அரசு அனுமதிக்காது. மேலும், விவசாயம் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.

SCROLL FOR NEXT